தாய்- மகனை தாக்கிய விவசாயிக்கு ரூ.6 ஆயிரம் அபராதம்


தாய்- மகனை தாக்கிய விவசாயிக்கு ரூ.6 ஆயிரம் அபராதம்
x

தாய்- மகனை தாக்கிய விவசாயிக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம்

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே எடப்பட்டி கிழக்கு காட்டு கொட்டகை பகுதியை சேர்ந்தவர் செம்மலை. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்தது. செம்மலையின் மனைவி தனலட்சுமி, மகன் மோகன்குமார் இருவரையும் முருகன் தரப்பினர் மண்வெட்டியால் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை ஆத்தூர் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து முடிந்தது. இதில் தாய்- மகனை தாக்கிய விவசாயி முருகனுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு முனுசாமி தீர்ப்பு கூறினார்.


Next Story