கடலூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தடை செய்யக்கோரி அனுமதியின்றி போராட்டம் நடத்திய 25 பேர் கைது
கடலூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தடை செய்யக்கோரி அனுமதியின்றி போராட்டம் நடத்திய 25 பேர் கைது செய்யப்பட்டனா்.
கடலூர்
காந்தி ஜெயந்தியான நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஊர்வலம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. இந்த ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்காத நிலையில், தமிழக அரசு ஊர்வலத்துக்கு தடை விதித்தது. இருப்பினும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினர் ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள் கடலூர்- விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் சசிகுமார் தலைமையில் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அவர்கள் 25 பேரை கடலூர் புதுநகர் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story