ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஊர்வலம் நடத்த சுப்ரீம் கோா்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இதனைத்ெதாடர்ந்து தமிழகம் முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கொந்தராயன்குளம் லட்சுமணன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சவுந்தரபாண்டியன் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணபுரத்தில் தொடங்கிய பேரணி பெரியமாரியம்மன் கோவில், சர்ச் சந்திப்பு, தேரடி மற்றும் நான்கு ரத வீதிகள் வழியாக சென்று வடக்கு ரத வீதியில் நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து வடக்கு ரத வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பிராந்த சக சேவா பிரமுக் முருகன், மாவட்ட தலைவர் விஜயராகவன், ஜில்லா கார்யவாக் ஜெயபாலன், விஸ்வ இந்து பரிசத் தென்மாநில அமைப்பாளர் சரவண கார்த்திக்., பா.ஜ.க. மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் உள்பட 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.