ரப்பர் சீட் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


ரப்பர் சீட் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 6:56 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே ரப்பர் சீட் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே ரப்பர் சீட் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மார்த்தாண்டம் அருகே உள்ள பள்ளியாடி பருத்திவிளையை சேர்ந்தவர் ராஜமுத்து (வயது 62). இவர் வாகைவிளையில் ரப்பர் சீட் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். வியாபாரத்தில் போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தை சரியாக நடத்த முடியாமல் ராஜமுத்து மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று ரப்பர் சீட் கடைக்கு சென்ற ராஜமுத்து இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது மகன் அஜீஷ் (25) அவருக்கு போன் செய்தார். ஆனால் ராஜமுத்து போனை எடுக்கவில்லை. பின்னர் மறுநாள் அஜீஷ் ரப்பர் சீட் கடைக்கு சென்று பார்த்தார். அப்போது கடையின் உள்ளே ராஜமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அஜீஷ் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜமுத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story