நான் தனித்தீவுக்கு செல்வதாக சொல்வது வதந்தி: தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்
நான் தனித்தீவுக்கு செல்வதாக சொல்வது வதந்தி என்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை நட்சத்திரம் மகாலட்சுமி-திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் ஆகியோரது திருமணம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களிலும் பல்வேறு விமர்சனங்களை ரசிகர்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்-மகாலட்சுமி தம்பதி குல தெய்வ கோவிலுக்கு செல்வதற்காக தூத்துக்குடிக்கு வந்தனர். தூத்துக்குடி விமான நிலையத்தில் ரவீந்தர் சந்திரசேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னுடைய திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது. உருவத்தை மட்டுமே பார்த்து ஒரு விஷயம் இவ்வளவு பெரிதாக பேசப்பட்டது. எனக்கே அதிர்ச்சிதான். இன்னொரு விஷயம் என்னவென்றால் இதனை ஒரு பெரிய திருப்பமாக பார்க்கிறேன். நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு வாழ்த்து கிடைப்பது மிகப்பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோன்று நான் தனித்தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் வதந்தி' என்று கூறினார்.