மினி மாரத்தான் ஓட்டம்
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில், மினி மாரத்தான் ஓட்டம் கொடைக்கானலில் நடந்தது.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மினி மாரத்தான் ஓட்டம் கொடைக்கானலில் நடந்தது. இதற்கான தொடக்க நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கலா சேதுபதி தலைமை தாங்கினார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாரா தேன்மொழி முன்னிலை வகித்தார். கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு மதுமதி, மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். கொடைக்கானல் வில்பட்டி பிரிவில் தொடங்கி, பல்கலைக்கழகம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டம் நடந்தது. 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இதில் அபர்ணா முதலிடத்தையும், பாண்டியம்மாள் 2-வது இடத்தையும், ரெக்ஸ்லின் திவ்யா 3-வது இடத்தையும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் வில்பட்டி ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி பேராசிரியர் ராஜம் நன்றி கூறினார்.