ராணுவ வீரர்களுக்கு ஓட்டப்பந்தயம்


ராணுவ வீரர்களுக்கு ஓட்டப்பந்தயம்
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஆர்.சி. ராணுவ முகாம் சார்பில் ராணுவ வீரர்களுக்கு ஓட்டப்பந்தயம் நடந்தது.

நீலகிரி

வெலிங்டன்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் எம்.ஆர்.சி. (மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர்) ராணுவ முகாம் மற்றும் தக்ஷின் பாரத் ஏரியாவின் தலைமையகம் சார்பில், 74-வது குடியரசு தினத்தையொட்டி ராணுவ வீரர்களுக்கு டூயத்லான் எண்டுரோ-23 என்ற ஓட்டப்பந்தயம் வெலிங்டனில் நேற்று நடைபெற்றது. இதன் கருப்பொருள் உங்கள் வரம்புக்கு சவால் விடுங்கள் என்பது ஆகும். வெலிங்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீநாகேஷ் பேரக்சில் இருந்து ஓட்டப்பந்தயம் தொடங்கியது.

இதனை எம்.ஆர்.சி. ராணுவ முகாம் கமாண்டென்ட் பிரிகேடியர் சுனில் குமார் யாதவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து 10 கி.மீ. தூரம் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் 6 பிரிவுகளில் போட்டி நடந்தது. இதில் 75 பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஓடினர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழுடன் பரிசுகள் வழங்கப்பட்டன. 74-வது குடியரசு தினம் மற்றும் இந்திய ராணுவத்தை நீலகிரி மக்கள் இடையே குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சிறப்பிக்கும் வகையில் இந்த மெகா நிகழ்வு நடத்தப்பட்டது.


Next Story