ரூ.10கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்


ரூ.10கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
x
திருப்பூர்


திருமுருகன்பூண்டி நகராட்சியின் அவசரக் கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேஸ்வரி, கமிஷனர் முகம்மது சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு தேவையான வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தனர். இதற்கு நகராட்சி தலைவர் குமார் பதில் அளித்து பேசுகையில் "திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.10 கோடி மதிப்பில் சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story