ரூ.38 லட்சம் உண்டியல் காணிக்கை


ரூ.38 லட்சம் உண்டியல் காணிக்கை
x

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் ரூ.38லட்சத்தை பக்தர்கள் காணிக்கையான செலுத்தி இருந்தனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் ரூ.38லட்சத்தை பக்தர்கள் காணிக்கையான செலுத்தி இருந்தனர்.

உண்டியல் பணம் எண்ணும் பணி

அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பணத்தை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கோவில் உதவி ஆணையர் முத்துராமன், துணை ஆணையர் உமாதேவி, கோவில் கண்காணிப்பாளர் பழனிவேல் கும்பகோணம் ஆய்வாளர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்களும், தாராசுரம் கே.எஸ்.கே. பொறியியல் கல்லூரி மாணவிகளும், கோவில் பணியாளர்களும் கோவிலில் உள்ள 12 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

ரூ.38 லட்சம்

இதில் ரூ.38 லட்சத்து 42 ஆயிரத்து 296 பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 96 கிராம் தங்கம், 3 கிலோ 315 கிராம் வெள்ளி, வெளி நாட்டு நாணயங்கள் 126 ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். கடந்த மார்ச் மாதம் 7-ந் தேதி உண்டியல் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும்2 மாதம் கழித்து நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story