சேலம் ராஜகணபதி கோவிலில் ரூ.8.37 லட்சம் உண்டியல் காணிக்கை
சேலம் ராஜகணபதி கோவிலில் ரூ.8.37 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.
சேலம்
சேலம் டவுன் ராஜகணபதி கோவிலில் 4 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு சுகவனேசுவரர் கோவிலில் வைத்து எண்ணப்பட்டன.
இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் ராஜா, சுகவனேசுவரர் கோவில் உதவி ஆணையர் சரவணன் மற்றும் கோவில் ஊழியர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்பினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முடிவில் ரூ.8 லட்சத்து 37 ஆயிரத்து 440 ரொக்கமும், 2 கிராமம் தங்கமும், 97 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அதேபோல், மகா சிவராத்திரியை முன்னிட்டு சுகவனேசுவரர் கோவிலில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த 3 உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன. அதில், ரூ.34 ஆயிரத்து 640 ரொக்கம் இருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story