ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலர்களுக்கு பணி விதிகளை மேலும் காலதாமதம் என்று வெளியிடுதல், விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்குதல், தேசிய ஊரக வேலை உறுதி திடடத்தில் கணினி உதவியாளர்களுக்கு பணி வரன்முறை வெளியிடுதல், வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு ஊதியங்களை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பெரும்பாலானோர் சிறு விடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் ஊரக வளர்ச்சிதுறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story