ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்  போராட்டம்
x

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவாரூர்
ஊராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 5 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. அந்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் அனைத்து வகை ஊழியர்களுக்கும் மாதத்தின் கடைசி நாளில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் நேற்று முன்தினம் முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 2-வது நாளாக நேற்று நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு வட்டச் செயலாளர் முரளி தலைமை தாங்கினார். வட்டத் தலைவர் கண்ணன், பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்டத் தலைவர் வசந்தன், செயலாளர் செந்தில் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இதேபோல, நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர், வட்டத் தலைவர் நேரு தலைமையில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட இணைச் செயலாளர் ராமமூர்த்தி மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. வலங்கைமான் ஊராட்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.







Next Story