ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்
x

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தினார்கள்

திருநெல்வேலி

ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், பணி நெருக்கடிகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் (வியாழக்கிழமை) போராட்டம் தொடர்கிறது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பலர் கலந்து கொண்டு பணிகளை புறக்கணித்து உள்ளனர். இதனால் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்கள், பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற டிசம்பர் 14-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.

இதேபோல் கடையநல்லூரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை பணிகள் பாதிக்கப்பட்டது., அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.


Next Story