ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள்ஆர்ப்பாட்டம்


ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள்ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

செங்கல்பட்டு மாவட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் உயர் அலுவலர்கள் பணிச்சுமை, நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீ¦து நடவடிக்கை எடுக்ககோரியும், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மீது திணிக்கப்படும் பணிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்ககோரி சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் முகம்து மீரான்இஸ்மாயில், வட்டார வளர்ச்சி அலுவலர் ராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கவிமலர் நன்றி கூறினார்.


Next Story