ஊரக வளர்ச்சி திட்ட பணிகள்


ஊரக வளர்ச்சி திட்ட பணிகள்
x

ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே உள்ள குண்டாயிருப்பு ஊராட்சியில் ஆலங்குளம்-வெம்பகோட்டை நெடுஞ்சாலையில் உள்ள அரசு நிலத்தில் திருநங்கைகள் 21 பேருக்கு வீடு கட்ட ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டு உள்ளது.

இந்த பட்டா நிலத்தில் திருநங்கைகளுக்கு சொந்தமாக வீடு கட்டி தர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வீடு கட்ட இருக்கும் இடத்தை கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், திட்ட இயக்குனர் திலகவதி ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் பார்வையிட்டனர். கல்லமநாயக்கர்பட்டி ஊராட்சி, குண்டாயிருப்பு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சி திட்ட பணிகளையும் பார்வையிட்டனர். ஆய்வின் போது தாசில்தார் ரெங்கநாதன், வெம்பக்கோட் டை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் செல்வராஜ், சத்தியவதி, ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் அறிவழகன், குண்டாயிருப்பு கிராம நிர்வாக அதிகாரி ராமசாமிபாண்டியன், ஆல ங்குளம் கிராம நிர்வாக அதிகாரி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story