கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த விளக்க கூட்டம்


கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த விளக்க கூட்டம்
x

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடந்தது.

கரூர்

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் தபால் அலுவலகம் முன்பு வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். செயலாளர் கருணாநிதி, பொருளாளர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூத்த ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு 3 கட்ட ஊதிய உயர்வு வழங்க வேண்டும், குரூப் இன்சூரன்ஸ் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், பென்ஷன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டம் நடந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story