எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியின் 20 வது பட்டமளிப்பு விழா
எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியின் 20 வது பட்டமளிப்பு விழாவில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் டிஆர்டிஓவின் இயக்குனர் டாக்டர். வி. பாலமுருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பட்டதாரி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியின் 20 வது பட்டமளிப்பு விழா மிகச்சிறப்பாக இக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் டிஆர்டிஓவின் இயக்குனர் டாக்டர். வி. பாலமுருகன் அவர்கள் கலந்துக்கொண்டார். அவர் 886 பட்டதாரி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
தர்மா நாயுடு கல்வி & தொண்டு அறக்கட்டளையின் நிறுவன தலைவர் திரு. டி.சுதர்சனம், திரு. டி. துரைசாமி, தலைவர், திரு. டி.பரந்தாமன், துணைத் தலைவர், திரு. D. தசரதன், செயலாளர், திரு. எஸ். அமர்நாத், பொருளாளர் திரு. எஸ்.கோபிநாத், இணைச் செயலாளர், சுதர்சனம் வித்யாஷ்ரம்மின் இயக்குனர் திருமதி. டி.சரஸ்வதி, எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனர் டாக்டர். எஸ். அரவிந்த், எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியின் இயக்குனர் திரு. டி.சபரிநாத், சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளி மற்றும் எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் திரு.பி.வெங்கடேஷ் ராஜா ஆகியோரும், பட்டதாரிகள், அவர்களின் குடும்பத்தினர், கல்லூரி பேராசிரியர்கள், மற்றும் பார்வையாளர்களும் விழாவில் பங்கேற்றனர்.
இவ்விழாவிற்கு முன்னதாக தலைவரை தொடர்ந்து சிறப்பு விருந்தினர், துணை தலைவர், குழும உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மாற்றும் பட்டதாரி மாணவர்கள் அனைவரும் பட்டதாரி உடை அணிந்து சம்பிரதாய பேரணியாக அணிவகுத்து வந்தனர்.
சிறப்பு விருந்தினர் டாக்டர். வி. பாலமுருகன் அவர்கள் தன சிறப்புரையில், " சமுதாயம் பல எதிர்பார்ப்புகளுடன் இளம் பட்டதாரிகளுக்காக காத்திருக்கிறது. மாணவர்கள் தங்கள் மென்திறன்களை வளர்த்துக்கொண்டு தத்தம் துறை சிறந்து விளங்க வேண்டும். இந்திய அரசாங்கம் இளைஞர்களுக்கு பல வாய்ப்புகளை அளித்து வருகிறது. தொழில்நுட்பாளர்களுக்கு முப்படை துறைகளில் தங்களின் பங்களிப்பை அளிக்க அரசு ஊக்குவிக்கிறது. பொறியியல் மாணவர்கள் அப்துல் கலாம் அவர்களின் 'டேர் டு ட்ரீம்" நிகழ்வில் பங்கு கொண்டு பரிசு பெற முயலவேண்டும். சிவிஆர்டிஇ யில் கூட பொறியியல் மாணவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன, என்று கூறினார். மேலும் அவர் மாணவர்களை பார்த்து "நீங்கள் அனைவரும் உங்கள் இலட்சியத்தை பற்றி கனவு காணவும், உணர்ந்து நேர்மையாக அதை அடைய தன் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் முயலவேண்டும். வாழ்கையில் எவ்வளவு உயர்ந்தாலும் உங்கள் பெற்றோரையும், பள்ளியையும் சொந்த ஊரையும் மறக்க கூடாது" என்றும் தன் உரையில் கூறினார்.
முன்னதாக, கல்லூரி முதல்வர் முனைவர் S.ராமச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை வழங்கி மாணவர்களுக்கு சிறந்த அறிவுரைகள் வழங்கினார். எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியின் தலைவர் திரு.D.துரைசாமி அவர்கள் தலைமை உரையை நிகழ்த்தி பட்டமளிப்பு விழாவைத் தொடங்கி வைத்தார். 2022 ஆண்டில் எஸ்.ஏ. .பொறியியல் கல்லூரியில், 886 பட்டதாரிகளுக்கும், தரவரிசையில் இடம்பெற்ற முதல் 16 மாணவர்களுக்கும், முதன்மை பிரிவில் தேர்ச்சிபெற்ற 106 மாணவர்களுக்கும் பட்டம் வழங்கப்பட்டது.
கல்லூரியில் பட்டதாரிகளின் சாதனைகளைக் கொண்டாடியதுடன், கல்வியில் சிறந்து விளங்கிய பட்டதாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தரவரிசைப் பட்டதாரிகளுக்கு மொத்தம் ரூ.1.85 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் எஸ்.ஏ.பொறியியல் கல்லூரியின் இயக்குனர் திரு.D.சபரிநாத் மாணவர்களுக்கு உறுதி ப்ரமானம் அளித்து பேசுகையில், "எங்கள் பட்டதாரிகள் எங்களின் பெருமை; நாங்கள் அவர்களுக்கு வழங்கிய வாய்ப்புகளை அவர்கள் சரியாக பயன் படுத்திக்கொண்டு தங்கள் திறன்களை துடிப்பாக வெளிப்படுத்தியுள்ளார்கள். இதுவே நம் நாட்டிற்கு நாங்கள் அளிக்கும் சேவை என்றும் கருதுகிறோம்." என்றார்.