எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா


எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா
x

874 பட்டதாரி மாணவர்களுக்கு தலைமை விருந்தினராக கலந்துக்கொண்ட காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யுஷன்ஸின் மனிதவள தலைவர் திருமதி தேன்மொழி ராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை...

எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா இக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை விருந்தினராக காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யுஷன்ஸின் மனிதவள தலைவர் திருமதி தேன்மொழி ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அவர் 874 பட்டதாரி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

தர்மா நாயுடு கல்வி & தொண்டு அறக்கட்டளையின் நிறுவன தலைவர் திரு. டி.சுதர்சனம் , திரு. டி. துரைசாமி, தலைவர், திரு. டி.பரந்தாமன், துணைத் தலைவர், திரு. D. தசரதன், செயலாளர், திரு. எஸ். அமர்நாத், பொருளாளர் திரு. எஸ்.கோபிநாத், இணைச் செயலாளர், சுதர்சனம் வித்யாஷ்ரம்மின் இயக்குனர் திருமதி. டி.சரஸ்வதி, எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனர் டாக்டர். எஸ். அரவிந்த், எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியின் இயக்குனர் திரு. டி.சபரிநாத், சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளி மற்றும் எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் திரு.பி.வெங்கடேஷ் ராஜா ஆகியோரும், பட்டதாரிகள், அவர்களின் குடும்பத்தினர், கல்லூரி பேராசிரியர்கள், மற்றும் பார்வையாளர்களும் விழாவில் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினர் திருமதி தேன்மொழி ராதாகிருஷ்ணன், தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கையில், "பட்டதாரிகள் இப்போது தங்கள் பொறுப்புகளை நோக்கிச் செல்ல வேண்டும்" என்று கூறினார். "ஒரே மாதிரியான கலாச்சாரத்திலிருந்து பன்முக கலாச்சாரத்திற்கு மாறுவதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். சமூக தொடர்பு, தன்னை வெளிப்படுதுதால் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் போன்றவை பணிச் சூழலுக்குத் தேவையான மென்திறன்களாகும். இந்தியாவின் வளர்ந்து வரும் உலகப் பொருளாதாரத்திற்கு இணையாக அவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்," என்றார்.

முன்னதாக, தலைமையாசிரியர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை வழங்குகையில் பட்டதாரிகளுக்கு சிறந்த அறிவுரைகளை வழங்கினார். எஸ்.ஏ. . பொறியியல் கல்லூரியின் தலைவர் திரு.D.துரைசாமி அவர்கள் தலைமை உரையை நிகழ்த்தி பட்டமளிப்பு விழாவைத் தொடங்கி வைத்தார். 2022 ஆண்டில் எஸ்.ஏ. .பொறியியல் கல்லூரியில், 874 பட்டதாரிகளுக்கும், தரவரிசையில் இடம்பெற்ற முதல் 10 மாணவர்களுக்கும், முதன்மை பிரிவில் தேர்ச்சிபெற்ற 50 மாணவர்களுக்கும் பட்டம் வழங்கப்பட்டது.

கல்லூரியில் பட்டதாரிகளின் சாதனைகளைக் கொண்டாடியதுடன், கல்வியில் சிறந்து விளங்கிய பட்டதாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தரவரிசைப் பட்டதாரிகளுக்கு மொத்தம் ரூ.1.40 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் எஸ்.ஏ.பொறியியல் கல்லூரியின் இயக்குனர் திரு.டி.சபரிநாத் பேசுகையில், "எங்கள் பட்டதாரிகள் எங்களின் பெருமை; நாங்கள் அவர்களுக்கு வழங்கிய தளத்தில், அவர்கள் துடிப்பான வண்ணங்களுடன் வெளிவந்துள்ளனர். அத்தகைய வலுவான பங்குகளை தேசத்திற்கு வழங்குவது இன்றியமையாதது என்று நாங்கள் கருதுகிறோம்." என்றார்.


Next Story