சாலைபுதூர்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளர்களுக்கு திட்ட விளக்க முகாம்
சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளர்களுக்கு திட்ட விளக்க முகாம் நடந்தது.
தட்டார்மடம்:
பேய்க்குளம் அருகே உள்ள சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளர்களுக்கு தேசிய குடற்புழு நீக்க மாத்திரை திட்டம் குறித்த விளக்க முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மருத்துவ அலுவலர் வள்ளி தலைமை தாங்கினார். இதில் அங்கன்வாடி, ஆஷா மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு மாத்திரை வழங்குவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தூத்துக்குடி தொழு நோய் துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து நியூட்டன் வருகை தந்து தொழு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இதில் சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஸ்குமார் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து சாலைபுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட கருப்பட்டி தயாரிக்கும் இடம், கல்குவாரி, ஆயில் நிறுவனங்களில் உள்ள பணியாளர்களிடமும் நேரில் சென்று தொழு நோய் குறித்த பரிசோதனை நடத்தி நோய் அறிகுறி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.