முத்துமாரியம்மன் கோவிலில் செடில் திருவிழா


முத்துமாரியம்மன் கோவிலில் செடில் திருவிழா
x

நாகை முத்துமாரியம்மன் கோவிலில் செடில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

நாகை முத்துமாரியம்மன் கோவிலில் செடில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செடில் திருவிழா

நாகை வெளிப்பாளையத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் செடில் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து முக்கிய வீதிகள் வழியாக கொடி ஊர்வலம் நடைபெற்றது.

கொடியேற்றம்

பின்னர் கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மேள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. முன்னதாக நேற்று முன்தினம் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது.கொடி கம்பத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இரவு மகாலட்சுமி் அவதாரத்தில் முத்து மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

12-ந்தேதி தேரோட்டம்

விழா நாட்களில் தினமும் முத்துமாரியம்மன், ரிஷப வாகனம் குதிரை வாகனம், கிளி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் செடில் உற்சவம் வருகிற 12- ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.


Next Story