யானைக்கால் நோய் பாதித்த 88 பேருக்கு பாதுகாப்பு பெட்டகம்


யானைக்கால் நோய் பாதித்த 88 பேருக்கு பாதுகாப்பு பெட்டகம்
x

ஜோலார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் யானைக்கால் நோய் பாதித்த 88 பேருக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, ஜோலார்பேட்டை வட்டார மருத்துவமனை இணைந்து தேசிய யானைக்கால் நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், யானைக்கால் நோயால் பாகதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் முகாம் நடைபெற்றது. ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி தேவி தலைமை வகித்தார். மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ராமலிங்கம் திட்ட விளக்க உரையாற்றினார்.

ஜோலார்பேட்டை, புதுப்பேட்டை, பொன்னேரி, குன்னத்தூர், மண்டலவாடி, திரியாலம், உள்ளிட்ட ஜோலார்பேட்டை வட்டார அளவில் உள்ள பகுதிகளில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட 88 நபர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட துணை இயக்குனர் செந்தில் பராமரிப்பு பெட்டகம் வழங்கி சிறப்புரையாற்றினார். சுகாதார ஆய்வாளர்கள் கோபி, புகழேந்தி, தமிழ்வாணன், சுந்தரபாண்டியன் மற்றும் சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துகிஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story