சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்துபொதுமக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும்கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுரை


சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்துபொதுமக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும்கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுரை
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து பொதுமக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் கிருஷ்ணகிரி-ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் சாமல்பட்டி தரைப்பாலம் சீரமைக்கும் பணிகள், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வடுகம்பட்டி அருகே சாலையின் குறுக்கே அடையாள பலகை அமைப்பது, தின்னகழனி பகுதியில் சாலையோரம் பள்ளம் உள்ள இடத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் கிருஷ்ணகிரி காமராஜர் நகர் முதல் பெத்த தாளப்பள்ளி வரை சாலையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல், கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகே சாலையை கடப்பவர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கையாக தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களின் வேகத்தினை குறைக்கும் பொருட்டு சாலையின் இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணிகள் குறித்தும், ராயக்கோட்டை மேம்பாலம் முதல் புதிய பஸ் நிலையம் வரை சாலை சீரமைக்கும் பணிகள் குறித்தும், கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் முதல் பழையபேட்டை மற்றும் குப்பம் செல்லும் சாலை சீரமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

பாதுகாப்பான பயணம்

சாலை பாதுகாப்பு குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட இடங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், காவல்துறை, வருவாய்த்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story