விபத்து நடந்த பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்

விபத்து நடந்த பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்
x

நன்னிலம் அருகே குளத்தில் கார் கவிழ்ந்து 4 பேர் பலியானதை தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

நன்னிலம்;

நன்னிலம் அருகே குளத்தில் கார் கவிழ்ந்து 4 பேர் பலியானதை தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்தில் 4 பேர் பலி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருவாரூர்- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் விசலூர் ஊராட்சி எல்லையில் குளத்தில் கார் பாய்ந்து சென்னையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த பகுதியில் குளத்தின் அருகே தடுப்புச்சுவர் கட்டியிருந்தால் இந்த விபத்தை தவிர்த்து இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இந்த பகுதி வழியாக தினமும் நூற்றுக்கணக்கான கார், வேன், ஆட்டோ, மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

தடுப்புச்சுவர்

குளத்தின் அருகே தடுப்புச்சுவர் இல்லாததால் மீண்டும் இதுபோன்ற விபத்துக்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த இடத்தில் மீண்டும் விபத்துகளை தடுக்க குளத்தின் அருகே விரைவில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story