சாகுபுரம் கமலாவதி பள்ளி முதலிடம்


சாகுபுரம் கமலாவதி பள்ளி முதலிடம்
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-13T00:17:09+05:30)

கிரிக்கெட் போட்டியில் சாகுபுரம் கமலாவதி பள்ளி முதலிடம் பிடித்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

திசையன்விளையில் உள்ள வி.வி.பொறியியல் கல்லூரி சார்பில் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது. 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளி அணியும், ராதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் விளையாடியது. இதில் சாகுபுரம் பள்ளி அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சுழற்கோப்பை, ரூ.10 ஆயிரத்தை தட்டிச் சென்றது.

சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சியாளர்கள் செல்வம், மணிகண்டன், அழகு கார்த்தி, சுப்பு நாச்சியார் ஆகியோரையும் பள்ளியின் டிரஸ்டியும், டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையின் மூத்த செயல் உதவி தலைவருமான ஜி. சீனிவாசன், தொழிற்சாலை பொது மேலாளர் ராமச்சந்திரன், பள்ளி முதல்வர் அனுராதா, பள்ளியின் மாணவர்கள் மனநல ஆலோசகர் கணேஷ், தலைமை ஆசிரியர் ஸ்டீபன் பாலாசீர், தலைமை ஆசிரியை சுப்புரத்தினம், பள்ளி அட்மினிஸ்ட்ரேட்டர் வி.மதன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.


Next Story