சாய் பாபா கோவில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூரில் சாய் பாபா கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் நெல்லை ரோட்டில் உள்ள செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் அருகில் ஷிர்டி சாய்மிஷன் டிரஸ்ட் சார்பில் புதிதாக சாய்பாபா கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதையொட்டி 4 கால யாகசாலை பூஜைகள் நடந்தன. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட புனித நீரால் விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை டிரஸ்ட் அறங்காவலர் செல்வமுருகன், ஆறுமுகநேரி ஸ்தபதி சிவனாதன், உடன்குடி நம்பி கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story