அல்லித்துறையில் புனித சவேரியார் ஆலய தேர்பவனி
அல்லித்துறையில் புனித சவேரியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது.
திருச்சி
சோமரசம்பேட்டையை அடுத்த அல்லித்துறையில் பிரசித்தி பெற்ற புனித சவேரியார் ஆலயம் உள்ளது.இந்த ஆலய திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு கோவில் சப்பரம் சுற்றுப்பிரகாரம் சென்று திருப்பலி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று புனித சவேரியார் தேர்பவனி நடைபெற்றது. தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அதன் பின் இரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் நன்றி திருப்பலியும் நடைபெறுகிறது. அதன் பின் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story