சைவ வேளாளர் சங்க கூட்டம்
செங்கோட்டையில் சைவ வேளாளர் சங்க கூட்டம் நடந்தது.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டையில் சைவ வேளாளர் பேரவை சார்பில் சங்க கட்டிடத்தில் வைத்து சைவ வேளாளர் சங்க கூட்டம் கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் வீரபுத்திரன், லட்சுமணபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் குலசேகரநாதர் சமேத அறம் வளர்த்த நயாகி கோவிலில் தைபூசம் 7-ம் திருநாள் சமுதாய மண்டகப்படி நடத்துவது, தை மாதம் இறுதியில் ஆனந்த விநாயகர் கோவிலில் வருசாபிஷேகம், தொடர் பூஜைககள் நடத்துவது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
கூட்டத்தில், நிர்வாகிகள் ஆவுடைப்பன், சுப்பிரமணியன், கண்ணன், கருப்பசாமி, ஆறுமுகம், குமார், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், முருகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story