அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்
அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பிச்சப்பாளி மேடு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலி குடங்களுடன் தவுட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள அத்தாணி சாலையில் ஒன்று திரண்டார்கள். பின்னர் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வருவதில்லை, 4 நாட்களாக உப்பு தண்ணீர் கூட வினியோகிக்கவில்லை, தெருவிளக்கு ஒளிர்வதில்லை என்று கூறி திடீர் சாலை மறியிலில் ஈடுபட்டார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் உரிய அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.