கள்ளிப்பட்டி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


கள்ளிப்பட்டி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

கள்ளிப்பட்டி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு

டி.என்.பாளையம்

கள்ளிப்பட்டி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

டி.என்.பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் ஊராட்சியில் தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி மற்றும் சாைல விரிவாக்க பணி நடைபெறுகிறது. கொண்டையம்பாளையத்தில் சுமார் 800 வீடுகளுக்கு செல்லும் கழிவுநீர் முறையான சாக்கடை வசதி இல்லாததால் தரைப்பாலம் வழியாக சென்று அத்தாணி-சத்தி ரோட்டில் தேங்கி நிற்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இதே நிலை நீடிக்கிறது.

இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை கொண்டையம்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குருமூர்த்தி, கொண்டையம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தன் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாக்கடை வசதி

அப்போது பொதுமக்கள், 'எங்களுக்கு முறையாக சாக்கடை வசதியை முதலில் செய்து கொடுக்கவேண்டும். அதன்பின்னர் தரைப்பாலத்தையும், சாலை விரிவாக்கத்தையும் செய்தால் போதும்' என்றனர். இதையடுத்து அதிகாரிகள் சாக்கடை வசதி அமைத்துக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டு இருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story