கோபி அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியல்- மூடக்கூடாது என மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டம்


கோபி அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியல்- மூடக்கூடாது என மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

கோபி அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மூடக்கூடாது என மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மூடக்கூடாது என மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோபி அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மூடக்கூடாது என மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்கள் சாலை மறியல்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளைபாறை மேடு என்ற இடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் மதுக்கடையை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் மதுக்கடையை மூடக்கோரி அருகே செல்லும் கொளப்பலூர்-குருமந்தூர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே இதுபற்றி கோபி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மதுக்கடையை மூடவேண்டும்

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பெண்கள் கூறும்போது, 'இங்கு மதுக்கடை செயல்படுவதால் நாங்கள் மிகவும் பாதிக்கப்படுகிறோம். எங்கள் பகுதியை சேர்ந்த ஆண்கள் வேலைக்கு செல்லாமல் இங்கு வந்து தினமும் மது குடித்து வருகின்றனர். இதனால் வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாமல் அவதிப்படுகிறோம்.

சிலர் மது குடித்துவிட்டு கடையிலேயே படுத்துக்கொள்கின்றனர். சிலர் குடிபோதையில் அலங்கோலமான நிலையில் கிடக்கின்றனர். இதனால் அந்த வழியாக பெண்கள், சிறுவர், சிறுமிகள் செல்ல அச்சப்படுகின்றனர். உடனே வெள்ளைபாறை மேடுவில் செயல்படும் டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் செல்போனில் பேசினார்கள். அதன்பின்னர் போலீசார் கூறும்போது, 'வருகிற நவம்பர் மாதத்துக்குள் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.' என்றனர். இதனை ஏற்றுக்கொண்ட பெண்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் கொளப்பலூர்-குருமந்தூர் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே வழக்கம்போல் மது குடிப்பதற்காக அங்கு வந்திருந்த மதுபிரியர்கள் ஒன்று சேர்ந்து டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கூடாது என்று கோஷமிட்டவாறு கடை முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருபுறம் மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியலிலும், மதுக்கடையை மூடக்கூடாது என மதுபிரியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் மதுக்கடை திறக்கப்பட்டு வழக்கம்போல் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.


Next Story