ஒருங்கிணைந்த ஊதிய உயர்வு தர வேண்டும்


ஒருங்கிணைந்த ஊதிய உயர்வு தர வேண்டும்
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தினர் அளித்த மனுவில், 'பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக நாங்கள் கடந்த 2013-ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பணியில் சேர்ந்தோம். தற்போது வரை தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். பிற மாவட்டங்களில் பணியாற்றுபவர்களுக்கு அதிக விலைவாசி உயர்வால் ஒருங்கிணைந்த ஊதியம் தரப்படுகிறது. ஊதிய உயர்வு பட்டியலில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் என இடம்பெற்றுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் எங்கள் பெயர் துப்புரவு பணியாளர் பட்டியலில் உள்ளது. துப்புரவு பணியாளர் பட்டியலில் இருந்து எங்கள் பெயரை நீக்கி பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் என்ற சம்பள பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும். மற்ற மாவட்டங்களை போல் எங்களுக்கும் ஒருங்கிணைந்த ஊதிய உயர்வு தர வேண்டும்' என்று கூறியுள்ளனர்.


Next Story