3 மாதமாக சம்பளம் வழங்க வில்லை


3 மாதமாக சம்பளம் வழங்க வில்லை
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

3 மாதமாக சம்பளம் வழங்க வில்லை என ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் புகார் கூறினர்

கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு மேயர் கல்பனா தலைமை தாங்கினார். துணை ஆணையாளர்கள் ஷர்மிளா, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கொடுத்த மனுவில், மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் 2 பேரும், மேல்நிலைப்பள்ளிகளில் 3 பேரும் வேலை செய்து வருகிறோம்.

எங்களுக்கு தினக்கூலியாக ரூ.250 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 3 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. சிலருக்கு 5 மாதமாக சம்பளம் வரவில்லை. எனவே எங்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

சின்னவேடம்பட்டி சுப்பநாயக்கன்புதூர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சாக்கடை, குடிநீர் போன்ற எந்த வசதியும் இல்லை. தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து உள்ளது. எனவே எங்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதுதவிர பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 81 மனுக்கள் கொடுக்கப்பட்டன.

அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிக ளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவிட்டார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story