40 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சலவன் ஏரி


40 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சலவன் ஏரி
x

40 ஆண்டுகளுக்கு பிறகு சலவன் ஏரி நிரம்பியது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பாச்சல் ஊராட்சியில் சலவன் ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 40 வருடங்களாக நிரம்பவில்லை. இந்தநிலையில் கடந்த ஆண்டு பெய்த மழையாலும், தற்போது பெய்துவரும் மழையாலும் 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஏரி நிரம்பி முழு கொள்ளளவை எட்டி கோடி போனது.

இதனால் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி கோடிவிட்ட பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்து, கிடா வெட்டி, மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.


Next Story