கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.90 லட்சத்துக்கு பருத்தி விற்பனை


கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.90 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
x

கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.90 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

சேலம்

எடப்பாடி:

சேலம் கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.90 லட்சம் மதிப்பிலான பருத்தி வணிகம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்து இருந்த சுமார் 3,900 பருத்தி மூட்டைகள் 700 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு பொதுஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தியானது குவின்டால் ஒன்று ரூ.6,760 முதல் ரூ.7,879 வரை விற்பனையானது. இதே போல் டி.சி.எச். ரக பருத்தியானது குவின்டால் ஒன்று ரூ.7,450 முதல் ரூ.8,579.வரை விற்பனையானது. கொட்டு ரக பருத்தி குவின்டால் ஒன்று ரூ.4,700 முதல் ரூ.5,999 வரை விலை போனது. நாள் முழுதும் நடந்த ஏலத்தின் மூலம் ரூபாய் 90 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை நடைபெற்றது.


Next Story