மாடப்பள்ளி உழவர் கூட்டுறவு சங்கம் மூலம் பருத்தி விற்பனை


மாடப்பள்ளி உழவர் கூட்டுறவு சங்கம் மூலம் பருத்தி விற்பனை
x

மாடப்பள்ளி உழவர் கூட்டுறவு சங்கம் மூலம் பருத்தி விற்பனை நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாலுகா மாடப்பள்ளி கிராமத்தில் மாடப்பள்ளி உழவர் சேவை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆலங்காயம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, கந்திலி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த பருத்தியை விற்பனை செய்வதற்காக மாடப்பள்ளி உழவர் சேவை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொண்டு வந்து வைப்பார்கள்.

இந்த பருத்தியை ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மும்பை பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பார்வையிட்டு ரகசிய முறையில் விலை நிர்ணயம் செய்வார்கள் இதில் யார் அதிக விலைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு பருத்தி விற்பனை செய்து விவசாயிகளுக்கு பணத்தை வழங்குவார்கள். அதன்படி நேற்று பருத்தி ஏல விற்பனை மாடப்பள்ளி கூட்டுறவு உழவர் சேவை கடன் சங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைவர் ஏ.தேவராஜ் தலைமை வகித்தார் துணைத்தலைவர் சாமிக்கண்ணு வரவேற்றார், கூட்டுறவு சங்க சார் பதிவாளர் சண்முகம் பூமி பூஜை போட்டு பருத்தி ஏல விற்பனையை தொடங்கி வைத்தார். முதல் நாளில் 500 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடிக்கு ஏலம் போனது.

நிகழ்ச்சியில் இயக்குனர்கள் விவசாயிகள், வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த பருத்திக்கு உடனடியாக பணம் வழங்கப்பட்டதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். முடிவில் செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


Next Story