மானிய விலையில் பழச்செடிகள் விற்பனை
தோட்டக்கலைத்துறை சார்பில் மானிய விலையில் பழச்செடிகள் விற்பனை
திருத்துறைப்பூண்டி:
முத்துப்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொருவருக்கும் பழச்செடிகளை தங்களது வீட்டு தோட்டத்தில் வளர்த்து பயிர் செய்வது ஒரு விருப்பமான விஷயம். குறிப்பாக ஒட்டு செடிகளை வாங்கி நடவு செய்வது அனைவராலும் முடியாத காரியம். ஒட்டுச்செடியின் விலை கூடுதலாகவும் அனைவராலும் எளிதில் வாங்கக்கூடிய விலையில் இருப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசால் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பழ தொகுப்பு தளை அரசு நிர்ணயித்த மானிய விலையில் வழங்குதல் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின்படி திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்கு 547 பழச்செடி தொகுப்பு வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 5 வகையான பழச்செடிகள் அடங்கிய ஒரு தொகுப்பில் ஒரு மா ஒட்டு செடி, கொய்யா பதியன், நெல்லி ஒட்டுச்செடி, எலுமிச்சை ஒட்டுச்செடி மற்றும் சீதா அடங்கிய தொகுப்பின் முழு விலை ரூ.200 ஆகும். இதில் மானிய விலை ரூபாய் 150 நீங்களாக ரூ. 50-ஐ ஒரு ஆதார் கார்டு நகலுடன் செலுத்தி முத்துப்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து அல்லது tnhorticulture.gov.in என்ற இணையத்தின் வாயிலாகவும் பதிவு செய்து மானியம் பெற்று பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.