பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.7½ கோடிக்கு ஆடுகள் விற்பனை


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.7½ கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 24 Jun 2023 1:15 AM IST (Updated: 24 Jun 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.7½ கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

பக்ரீத் பண்டிகை

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில், நேற்று வழக்கத்தை விட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். அதிகாலை 5 மணி முதல் ஆடுகள் விற்பனை தொடங்கியது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு, கோலார், ஆந்திர மாநிலம் குப்பம், சித்தூர், தமிழகத்தில் வேலூர், சென்னை, கடலூர், திருவண்ணாமலை, சேலம், கோவை, திருச்சி, தர்மபுரி போன்ற இடங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆடுகள் வாங்க சந்தையில் குவிந்தனர்.

ரூ.7½ கோடிக்கு விற்பனை

வழக்கமாக, 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனையாகும். ஆனால், பக்ரீத் பண்டிகை விற்பனை என்பதால் சற்று விலை அதிகரித்து, 10 கிலோ எடை கொண்ட ஆடு, ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை விலை போனது. குறைந்த பட்சம் ஒரு ஆடு ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.65 ஆயிரம் வரை விற்பனை ஆனது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தையில் நேற்று ஆடுகளை வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் ஆடுகள் விற்பனை படுஜோராகநடந்தது.

சந்தையில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனை ஆனதால், நேற்று ஒரே நாளில் ரூ.7.50 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story