அய்யலூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை


அய்யலூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை
x
தினத்தந்தி 13 Jan 2023 12:30 AM IST (Updated: 13 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அய்யலூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை நடந்தது.

திண்டுக்கல்

அய்யலூர் சந்தை

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். இது மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை வர்த்தகம் செய்ய அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று சந்தையில் ஆடு மற்றும் கோழிகளை வாங்க வியாபாரிகள் குவிந்தனர். ஆனால் ஆடு, கோழிகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. காரணம் கடும் பனிப்பொழிவால் குறைந்த அளவிலான விவசாயிகளே கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

விலை உயர்வு

வரத்து குறைந்ததால் ஆடு மற்றும் கோழிகளின் விலை உயர்ந்தது. அதில் கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்துக்கு விற்ற 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ரூ.7 ஆயிரத்துக்கும், ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற செம்மறி ஆடு ரூ.6 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

நாட்டுக்கோழி 1 கிலோ ரூ.400-க்கும், சண்டைக்கு பயன்படும் கட்டு சேவல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இளைஞர்கள் சேவல்களை மோத விட்டுப் பார்த்து சிறந்த சேவலை தேர்வு செய்து வாங்கி சென்றனர். நேற்று மட்டும் அய்யலூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை மந்தமாக இருந்தது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story