ரூ.1 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனை


ரூ.1 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனை
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனையானது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் அரசு தினசரி சந்தை இயங்கி வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் மற்றும் மாடுகள் வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் ஆடுகள் மற்றும் மாடுகளை விற்பனைக்காக பாவூர்சத்திரம் சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். ராஜபாளையம், தென்காசி, பொட்டல்புதூர், மேலப்பாளையம், கடையநல்லூர், சங்கரன்கோவில், பத்தமடை, கேரளாவின் தென்மலை பகுதிகளில் இருந்து அதிக அளவில் ஆடுகள் மற்றும் மாடுகள் வாங்குவதற்காக வியாபாரிகள் குவிந்திருந்தனர்.

ஒரு ஆடு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனையானது. மேலும் மாடுகளின் விற்பனையும் அதிகளவில் காணப்பட்டது.

பாவூர்சத்திரம் அரசு சந்தையில் நேற்று ரூ.1 கோடிக்கு ஆடுகள் மற்றும் மாடுகள் விற்பனையாகி உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.



Next Story