ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனை


ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x

வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒரேநாளில் ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

திருப்பத்தூர்

ஆட்டு சந்தை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் வாரந்தோறும் ஆட்டு சந்தை நடைபெற்று வருகிறது. நாளை (வியாழக்கிழமை) இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

பக்ரீத் பண்டிகை நடைபெற இருக்கும் இந்த நேரத்தில் நேற்று ஆட்டு சந்தை நடைபெற்றது. இதனால் திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.

ரூ.12 கோடிக்கு விற்பனை

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடுகளை வாங்க இஸ்லாமியர்கள் மற்றும் விவசாயிகள் குவிந்தனர். சந்தைக்கு கொண்டுவரப்பட்டு இருந்த ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒரு ஆட்டின் குறைந்தபட்ச விலை ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் சுமார் ரூ.12 கோடிக்கு மேல் விற்பனையானது என்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story