தபால் நிலையங்களில் தங்கபத்திரம் விற்பனை


தபால் நிலையங்களில் தங்கபத்திரம் விற்பனை
x

கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திலுள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை திங்கட்கிழமை தொடங்குகிறது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திலுள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை நாளைமறுநாள்(திங்கட்கிழமை)தொடங்குகிறது.

கோவில்பட்டி முதல்நிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மு. பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தங்கபத்திரம் விற்பனை

மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளி யிடுகிறது. தங்க பத்திர விற்பனை தபால் நிலையங்கள் மூலமாக நாளைமறுநாள்(திங்கட்கிழமை) முதல் 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 5091 ஆகும்.

கோவில்பட்டி, சங்கரன்கோவில், மற்றும் தென்காசி தலைமை தபால் நிலையங்கள், மற்றும் அனைத்து துணை தபால் நிலையங்களிலும் தங்க பத்திர விற்பனை நடைபெறும். தங்கம் பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும். தனிநபர் ஒரு நிதி ஆண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை வாங்கலாம்.

2½ சதவீதம் வட்டி

மேலும் முதலீட்டுத் தொகைக்கு 2½ சதவீதம் வட்டியும், 8 ஆண்டு கழித்து முதிர்வடையும் நாளில் அன்றைய தங்கத்தின் விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும். தங்க பத்திரம் வாங்குபவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பான் கார்டு கட்டாயம் தேவை. ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, அல்லது பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் கொடுத்து அனைத்து தபால் நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story