தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை
இந்திய தபால் துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை செய்யப்படுகிறது.
திண்டுக்கல்
இந்திய தபால் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் தங்க சேமிப்பு பத்திரம் குறிப்பிட்ட நாட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தபால் அலுவலகங்களில் தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை நேற்று தொடங்கியது. வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை 5 நாட்கள் நடக்கிறது.
ஒரு கிராம் மதிப்புள்ள தங்க சேமிப்பு பத்திரத்தின் விலை ரூ.5,923 ஆகும். இத்திட்டத்தில் குறைந்த பட்சம் ஒரு கிராம் முதல் 4 ஆயிரம் கிராம் மதிப்பிலான தங்க சேமிப்பு பத்திரத்தை வாங்கலாம். 5 ஆண்டுகளுக்கு பிறகு முன் முதிர்வும், 8 ஆண்டுகளுக்கு பிறகு முழு முதிர்வும் அடையும். இது மத்திய அரசின் திட்டம் என்பதால், பணத்துக்கு முழு உத்திரவாதம் உண்டு. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். இத்தகவலை, திண்டுக்கல் தலைமை தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story