உருக்காலையில் உற்பத்தி செய்யப்படும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை


உருக்காலையில் உற்பத்தி செய்யப்படும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை
x

சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் உருக்காலையில் உற்பத்தி செய்யப்படும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நடைபெற்றது.

சேலம்

சூரமங்கலம்

நாடு முழுவதும் பெரிய ரெயில் நிலையங்களில் 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' என்ற பெயரில் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த ஊர்களுக்கு பெருமை சேர்க்கும் பொருட்களை காட்சிபடுத்தவும், அவற்றை விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் உருக்காலையில் உற்பத்தி செய்யப்படும் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய கடை அமைக்கப்பட்டுள்ளது. இதை சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், சேலம் உருக்காலை மார்க்கெட்டிங் பொது மேலாளர் நாயர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கடையில் வீட்டுக்கு தேவையான தட்டு, டம்ளர், கிண்ணம், பிளாஸ்க், டின்னர் செட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட ஸ்டெயின்லெஸ் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story