ரூ.14¾ கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை


ரூ.14¾ கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.14¾ கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை நடந்தது. இது கடந்த ஆண்டை விட ரூ.1 கோடி அதிகமாகும்.

கடலூர்

கடலூர் முதுநகர்:

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்துக்கள் அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். சினிமா ரசிகர்கள், தியேட்டரில் வெளியான புதிய படங்களை பார்த்து மகிழ்ந்தனர். மதுபிரியர்கள், வழக்கம்போல் தங்களது நண்பர்களுடன் மது அருந்தி தீபாவளியை கொண்டாடினர்.

மது விற்பனை அதிகம்

கடலூர் மாவட்டத்தில் 145 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தீபாவளியையொட்டி கடந்த 23 மற்றும் 24-ந் தேதிகளில் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. அந்த வகையில் 23-ந் தேதி கடலூர் மாவட்டம் முழுவதும் ரூ.7 கோடியே 28 லட்சத்து 82 ஆயிரத்து 920-க்கும், நேற்று ரூ.7 கோடி 44 லட்சத்து 48 ஆயிரத்து 980-க்கும் மதுபானங்கள் விற்பனையானது. அதாவது கடந்த 2 நாளில் மட்டும் ரூ.14 கோடியே 73 லட்சத்து 31 ஆயிரத்து 900-க்கு மது விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட ரூ.1 கோடி அதிகமாகும். கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி ரூ.13 கோடியே 73 லட்சத்து 90 ஆயிரத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story