பள்ளி மாணவர்களுக்கு மது பாட்டில்கள் விற்பனை


பள்ளி மாணவர்களுக்கு மது பாட்டில்கள் விற்பனை
x

பள்ளி மாணவர்களுக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் நிலை உள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே சில மதுபான கூடங்களில்(பார்) சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும் தற்போது பள்ளி மாணவர்கள் சிலர் மது போதைக்கு அடிமையாகி வருவதாகவும், சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பவர்கள், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. கடந்த 25-ந்தேதி காலை பள்ளி மாணவர்கள் சீருடையில் இருந்த 2 பேர் பள்ளிக்கு செல்லாமல் பெரம்பலூரில் ஒரு டாஸ்மாக் கடை அருகே உள்ள மதுபான கூடத்தில் இருந்து ஒருவரிடம் இருந்து மதுபாட்டில்களை வாங்கி, அதனை புத்தகங்களை சுமக்கும் பையில் வைத்துக்கொண்டும், நொறுக்கு தீனிகளை வாங்கிக்கொண்டும் காட்டு பகுதிக்கு சென்று மது அருந்தியதோடு, புகை பிடித்தனர். பின்னர் போதையில் அவர்கள் நகரில் தள்ளாடியபடி வலம் வந்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி மாணவர்களுக்கு மது பாட்டில்கள், போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பதோடு, விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.


Next Story