தபால் நிலையங்களில் தேசியகொடி விற்பனை தொடக்கம்


தபால் நிலையங்களில் தேசியகொடி விற்பனை தொடக்கம்
x
நாமக்கல்

நாமக்கல் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பார்த்திபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு இந்த ஆண்டும் இல்லங்கள் தோறும் தேசிய கொடியை சுதந்திர தினத்தன்று பறக்க விட்டு கொண்டாடிட வேண்டுகோள் விடுத்து உள்ளது. நாமக்கல் தலைமை தபால் நிலையம், திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம், கணேசபுரம், சேந்தமங்கலம், செம்மேடு, மோகனூர், பரமத்திவேலூர், சங்ககிரி, குமாரபாளையம் மற்றும் எடப்பாடி ஆகிய துணை அஞ்சலகங்களில் தேசியக்கொடியானது விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. ஒரு கொடியின் விலை ரூ.25 மட்டுமே. இதற்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாது.

வரும் நாட்களில் நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தேசியக்கொடியானது கிடைக்குமாறு வழிவகை செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story