நெல், மக்காச்சோளம் மறைமுக ஏலம் மூலம் விற்பனை


நெல், மக்காச்சோளம் மறைமுக ஏலம் மூலம் விற்பனை
x

நெல், மக்காச்சோளம் மறைமுக ஏலம் மூலம் விற்பனை நடந்தது.

விருதுநகர்


விருதுநகர் விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 21.3 மெட்ரிக் டன் நெல் ரூ. 5 லட்சத்து 500-க்கு விற்பனைசெய்யப்பட்டது. இதில் 9 விவசாயிகள் பயனடைந்தநிலையில் 3 வியாபாரிகள் கலந்து கொண்டு நெல் கொள்முதல் செய்தனர். இதேபோன்று அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 13 மெட்ரிக் டன் மக்காச்சோளம் ரூ.28,600-க்கு மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் 2 விவசாயிகள் பயனடைந்தனர். 2 வியாபாரிகள் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்தனர். மேற்கண்ட தகவலை விருதுநகர் வேளாண் விற்பனைக்குழு செயலாளர் வேலுச்சாமி கூறினார்.


Related Tags :
Next Story