மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருட்கள் விற்பனை கண்காட்சி
மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருட்கள் விற்பனை கண்காட்சியில் பங்குபெற பதிவு செய்யுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், அனைத்து மாநில சுய உதவிக்குழுக்களின் சிறப்பு வாய்ந்த மற்றும் தரமுள்ள பொருட்களை விற்பனை செய்ய சாராஸ் மேளா விற்பனை கண்காட்சி வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் மே 15-ந் தேதி வரை சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ளது.
மேற்படி சாராஸ் மேளா விற்பனை கண்காட்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள திருப்பத்தூர் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் வருகிற 17-ந் தேதிக்குள் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மூன்றாவது தளம் சி-பிரிவு மாவட்ட கலெக்டர் அலுவலகம் திருப்பத்தூர் என்ற முகவரியில் செயல்படும் மகளிர் திட்ட அலுவலகத்தில் நேரிலும், 9444094177 என்ற செல்போன் எண்ணிலும் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்
Related Tags :
Next Story