தேனியில் தரமற்ற உணவு விற்பனை: 6 கடைக்காரர்களுக்கு அபராதம்


தேனியில் தரமற்ற உணவு விற்பனை:  6 கடைக்காரர்களுக்கு அபராதம்
x

தேனியில் தரமற்ற உணவு விற்பனை செய்த 6 கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தேனி

தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராகவன் தலைமையில், தேனி உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் இன்று சோதனை செய்தனர். பஸ் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள கடைகள், தள்ளுவண்டி கடைகளில் அவர்கள் சோதனை நடத்தினர். அப்போது சில கடைகளில் காலாவதியான மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 6 கடைக்காரர்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.


Next Story