புகையிலை பொருட்கள் விற்பனை; 6 வியாபாரிகள் கைது


புகையிலை பொருட்கள் விற்பனை; 6 வியாபாரிகள் கைது
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் விற்பனை; 6 வியாபாரிகள் கைது

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என மார்த்தாண்டம் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ் பாபு தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 6 வியாபாரிகள் சிக்கினர். அவர்களிடம் இருந்து 135 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மார்த்தாண்டம் அருகே கல்லுக்கூட்டம் பகுதியில் பழ வியாபாரம் செய்த வைகுண்ட மணி (45), மார்த்தாண்டம் கல்லூரி எதிர்ப்புறம் பழக்கடை வியாபாரம் செய்த மணி மனைவி கெப்சிபா (40), மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் பழக்கடை நடத்திய முளங்குழி பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் (52), வெட்டுமணி பகுதியில் டீக்கடை நடத்திய ஜெகதீஷ் (72), பழக்கடை நடத்திய சிவகுமார் (45), மார்த்தாண்டத்தில் டீ வியாபாரம் செய்த அஜீஸ் (31) ஆகியோரிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.


Next Story